பாலஸ்தீன் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் பலியானதாக தகவல்!

பாலஸ்தீனின் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
பாலஸ்தீன் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 24 பேர் பலியானதாக தகவல்!
Published on

ஜெருசலேம்,

பாலஸ்தீனின் காசா பகுதி இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளையும் உயிர்பலிகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

பாலஸ்தீன் காசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பாலஸ்தீன போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உட்பட குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஓர் ஐந்து வயது பெண் குழந்தை உட்பட 6 குழந்தைகளும் அடக்கம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இதுவரை நடந்த தாக்குதல் சம்பவங்களில் 204 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் இஸ்ரேல் தரப்பு இதனை மறுத்துள்ளது. பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ராக்கெட் ஏவுகணை தாக்குதலில் தான் குழந்தைகள் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாக இஸ்ரேல் கூறியது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களில் ஒருவரை இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்த பிறகு, அந்த அமைப்பின் அச்சுறுத்தல் வந்ததைத் தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com