அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு

ஜூன் மாதம் வரையிலான 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக சரிவை கண்டுள்ளது.
அமெரிக்காவில் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6% சரிவு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த தனியார் பங்கு முதலீடு, பலவீனமான குடியிருப்பு அல்லாத நிலையான முதலீடு மற்றும் மத்திய அரசு மற்றும் உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்களின் குறைந்த செலவினம் ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயம் அங்கு நுகர்வு செலவுகள் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதியின் பங்கு 1.42 சதவீதமாக உள்ளது என்றும் அந்நாட்டின் வணிக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com