ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்தல்


ராணுவ ஆட்சி அமலில் உள்ள மியான்மரில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்தல்
x

photo Credit: Reuters

இன்று முதல் கட்டமாகவும், இரண்டாவது கட்டம் ஜனவரி 11 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் ஜனவரி 25 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளது.

யாங்கூன்,

மியான்மரில் 2021 பிப்ரவரியில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவராக இருந்த ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைகப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக அந்த நாட்டில் தேர்தல் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெறுகிறது.தேர்தலை 3 கட்டங்களாக முடிவு செய்யப்பட்டுள்ளது . முதல் கட்டமாக இன்றும் இரண்டாவது கட்டம் ஜனவரி 11 ஆம் தேதியும், மூன்றாம் கட்டம் ஜனவரி 25 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, ஜனவரி இறுதிக்குள் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

இருப்பினும், முக்கிய கட்சிகள் தேர்தலில் விலக்கப்பட்டதாலும், பேச்சு சுதந்திரம் மற்றும் அடக்குமுறைச் சூழல் மீதான வரம்புகள் காரணமாகவும் முடிவுகள் சட்டப்பூர்வமானதாக இருக்காது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.மியான்மரில் உள்நாட்டுப் போர் காரணமாக, 36 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது.

1 More update

Next Story