இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா
Published on

கொழும்பு,

இலங்கை ராணுவ தளபதி சுவேந்திர சில்வா, மே 31-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள விகம் லியனகே ஜூன் 1-ம் தேதி பொறுப்பேற்கிறார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகம் லியனகே, இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் கட்டளைத் தளபதியாகயும் பணியாற்றினார்.

இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் படைகளின் தலைமையதிகாரியாக பதவியேற்றார். இந்தநிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் அவர் இலங்கையின் இராணுவத்தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

ராணுவ தளபதி சுவேந்திர சில்வா மே 31-ம் தேதி பதவியை விட்டு விலகுவதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் கடந்த 15-ம் தேதி கூறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com