அமெரிக்கா: ஏப்ரல் 2-ந் தேதி ‘இந்து புத்தாண்டாக’ அறிவித்தார் ஜார்ஜியா கவர்னர்

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஏப்ரல் 2-ந் தேதி இந்து புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று அம்மாகாணத்தின் கவர்னர் அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்து மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மாகாணத்தின் பல்வேறு வளர்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இந்நிலையில், இந்து சமூக மக்களை அங்கீகரிக்கும் விதமாக இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி, இந்து புத்தாண்டாக கொண்டாடப்படும் என ஜார்ஜியா கவர்னர் பிரையன் கெம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து புத்தாண்டு ஜார்ஜியாவை வீடு என்று அழைக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகும். நமது மாகாணம் இந்து அமெரிக்கர்களின் பங்களிப்பால் அளவிடமுடியாத அளவிற்கு வளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குடும்பங்கள் மாகாணத்தின் கூட்டு பாரம்பரியம் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன மற்றும் அவர்களின் மத மரபுகள் ஜார்ஜியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மைக்கு சேர்க்கின்றன என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com