உக்ரைன் வந்த ஜெர்மனி மந்திரி; ராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி


உக்ரைன் வந்த ஜெர்மனி மந்திரி; ராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி
x

உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கும் 2-வது பெரிய நாடு ஜெர்மனி ஆகும்.

கீவ்,

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன. இதன்மூலம் உக்ரைன் தொடர்ந்து போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

அந்தவகையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கும் 2-வது பெரிய நாடு ஜெர்மனி. அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஜோஹன் வடேபுல் அறிவிக்கப்படாத பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். அங்கு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரி ஆண்ட்ரி சிபிஹாவை சந்தித்து பேசினார். அப்போது ரஷியாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story