ஜெர்மனி: முன்னாள் உளவு பிரிவு தலைவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது

இந்த உளவு தகவல்களை வெளிநாட்டு உளவு பிரிவு அதிகாரிக்கு தேவையான பகுப்பாய்வுக்காக ஹேன்னிங் பயன்படுத்தி உள்ளார் என தெரிகிறது.
ஜெர்மனி:  முன்னாள் உளவு பிரிவு தலைவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது
Published on: 

பெர்லின்

ஜெர்மனியின் முன்னாள் உளவு பிரிவு தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஜெர்மனி நாட்டின் முன்னாள் உளவு பிரிவு தலைவராக இருந்தவர் ஆகஸ்டு ஹேன்னிங். நாட்டின் ரகசியங்களை உளவு பார்த்தல், ரகசியங்களை தவறாக பயன்படுத்துதல், தேசத்துரோகத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு உள்ளன.

இருவர் கைது

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இவர் தவிர, ஹேன்னிங் உடன் கூட்டு சேர்ந்து முன்னாள் உயரதிகாரியான மேன்பிரெட் டி என்பவரும் இந்த முறைகேடான விசயங்களில் ஈடுபட்டுள்ளார். இந்த இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து காவலில் எடுத்துள்ளனர்.

பெர்லின் நகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள இவர்களுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் அடுத்தடுத்து சோதனையிலும் ஈடுபட்டனர். மேன்பிரெட், ஹேன்னிங்கின் வலது கரம் போல் செயல்பட்டு வந்துள்ளார். அவர் அதற்கு முன்பு, உள்துறை அமைச்சகத்தில் நாடாளுமன்ற உதவியாளராக இருந்துள்ளார். இதேபோன்று, பல்வேறு உளவு பிரிவு தலைவர்களுக்கு உதவி அதிகாரியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

அரசு வழக்கறிஞர்கள்

இவர், தேசத்துரோக செயல்களை தூண்டி விடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளார் மற்றும் அதற்கு உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

2010-ம் ஆண்டில் இருந்து இருவரும் இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று தெரிகிறது. இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்பு கொண்டு விட்டனர் என அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

உளவு ஆவணங்கள்

இதன்படி, மேன்பிரெட் உளவு தகவல்களை ஹேன்னிங்கிடம் வழங்கியுள்ளார். உயரதிகாரிகளில் இருந்து மத்திய மந்திரிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்குள் தொடர்பில் இருக்க வேண்டிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, உள்நாட்டு பயன்பாட்டிற்கான உளவு ஆவணங்களை அவர் இதுபோல் ஹேன்னிங்கிற்கு வழங்கி உள்ளார்.

அவற்றிற்கு ஈடாக பணமும் பெற்றுள்ளார். இந்த உளவு தகவல்களை வெளிநாட்டு உளவு பிரிவு அதிகாரிக்கு தேவையான பகுப்பாய்வுக்காக ஹேன்னிங் பயன்படுத்தி உள்ளார் என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com