பெர்லின் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய பெண்களுக்கு உடல்நலம் பாதிப்பு

பெர்லின் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய பெண்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
பெர்லின் மாநாட்டில் பங்கேற்ற ரஷிய பெண்களுக்கு உடல்நலம் பாதிப்பு
Published on

பெர்லின்,

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கடந்த மாதம் 26, 30-ந் தேதிகளில் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. இதில் ரஷியா உள்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷிய நாட்டை சேர்ந்த 2 பெண் பத்திரிகையாளர்களுக்கு நாடு திரும்பியதும் உடல்நலம் சரியில்லாமல் போனது. அதில் ஒரு பெண் தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக கூறினார்.

ரஷிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது விஷ தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி சைபீரியாவில் இருந்து திரும்பும் வழியில் உடல்நலம் சரியில்லாமல் போனதும், அவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததும் பின்னர் தெரிய வந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com