ஜெர்மனி : பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலி

ஜெர்மனியில் பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலியை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
ஜெர்மனி : பாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலி
Published on

பெர்லின்,

ஜெர்மனியின் ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியேற முடியாமல் தவித்தது.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எலியை கண்டு பரிதாபம் அடைந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அதனை காப்பற்ற முயன்றார். ஆனால் அவரால் அது முடியவில்லை.

எனவே அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பல மணி நேரம் போராடி எலியை பத்திரமாக மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com