

பெர்லின்,
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி அரசியலில் இதுவரை இல் லாத ஒரு மாபெரும் அரசியல் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாக்சனி-அன்ஹால்ட் மாகாணத்திற்கு நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், அதிபர் பிரீட்ரிக் மெர்சின் ஆளுங்கட்சிக்கு மக்கள் பலத்த அடியைக் கொடுத்துள்ளனர்.
கடந்த 24 ஆண்டுகளாக இம்மாகாணத்தை ஆண்டு வந்த ஆளுங்கட்சி வெறும் 17.2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. மாறாக, கடுமையான குடியேற்ற எதிர்ப்பு மற்றும் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட 'ஏ.எப்.டி' கட்சி 43.8 சதவீத வாக்குகளை அள்ளிக் குவித்து வெற்றியைப் பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 83 இடங்களில் இக்கட்சி 39 இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது. தனித்து ஆட்சி அமைக்க இன்னும் 3 இடங்களே தேவைப்படும் நிலையில், பிற கட்சிகள் இவர்களுடன் கூட்டணி வைக்க மறுப்பதால் ஜெர் மனி அரசியலில் பெரும் பரபரப்பும் இழுபறியும் நீடிக்கிறது.