தீ விபத்தில் சரிந்து விழுந்த பிரமாண்ட மசூதி! - பரபரப்பு வீடியோ

இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா இஸ்லாமிய மையப் பெரிய மசூதியின் ராட்சத குவிமாடம் தீவிபத்தில் இடிந்து விழும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது
Published on: 

ஜகர்த்தா

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மைய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தால், மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் உள்ள இஸ்லாமிய மைய மசூதியில் ஏற்பட்ட தீ விபத்தால், மசூதி தரைமட்டமாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தீயில் எரிந்துகொண்டிருந்த மசூதியின் கோபுரம் சரிந்துவிழும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com