உலக அளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு: தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.07 கோடியாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு: தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5.89 கோடியாக உயர்வு
Published on

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 5,89,70,525 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4,07,59,532 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 93 ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1,68,17,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,064 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா - பாதிப்பு - 1,25,88661, உயிரிழப்பு - 2,62,696, குணமடைந்தோர் - 74,52,540

இந்தியா - பாதிப்பு - 91,40,312, உயிரிழப்பு - 1,33,773, குணமடைந்தோர் - 85,61,444

பிரேசில் - பாதிப்பு - 60,71,401, உயிரிழப்பு - 1,69,197, குணமடைந்தோர் - 54,32,505

பிரான்ஸ் - பாதிப்பு - 21,40,208, உயிரிழப்பு - 48,732, குணமடைந்தோர் - 1,49,521

ரஷியா - பாதிப்பு - 20,89,329, உயிரிழப்பு - 36,179, குணமடைந்தோர் -15,95,443

தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-

ஸ்பெயின் -15,89,219

இங்கிலாந்து - 15,12,045

இத்தாலி - 14,08,868

அர்ஜென்டினா - 13,70,366

கொலம்பியா - 12,48,417

மெக்சிகோ - 10,32,688

பெரு - 9,49,670

ஜெர்மனி - 9,32,111

போலந்து - 8,61,331

ஈரான் - 8,54,361

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com