ஈரானின் பிடியில் உலகளாவிய பொருளாதாரம் சிக்கியுள்ளது: அமெரிக்கா

அமெரிக்காவின் ஆயுத படைகளின் தலைமை தளபதி டேன் கெய்ன், அமெரிக்க போர் துறைக்கான மந்திரி பீட் ஹெக்சேத் உடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
ஈரானின் பிடியில் உலகளாவிய பொருளாதாரம் சிக்கியுள்ளது:  அமெரிக்கா
Published on

வாஷிங்டன் டி.சி.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் நாட்டில் வைத்து, 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. எனினும் போர் நிறுத்த நீட்டிப்புக்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவின் ஆயுத படைகளின் தலைமை தளபதி டேன் கெய்ன், அமெரிக்க போர் துறைக்கான மந்திரி பீட் ஹெக்சேத் உடன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.

அப்போது அவர் ஈரானை கடுமையாக சாடினார். கடந்த 7 வாரங்களாக ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், வர்த்தக கப்பல்களை தாக்கியும், தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறினார். வர்த்தக போக்குவரத்து செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி, உலக பொருளாதார பாதிப்பை ஈரான் ஏற்படுத்தி வருகிறது என்றார்.

உலகளாவிய விநியோக சங்கிலியை ஈரான் ஆயுதம் போன்று பயன்படுத்தி வருகிறது. பணய கைதி போன்று, உலகளாவிய பொருளாதாரம் ஈரானின் பிடியில் சிக்கியுள்ளது என கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com