உலகளவில் கொரோனா பாதிப்பு 20 கோடியை கடக்கிறது: 135 நாடுகளுக்கு பரவியது, டெல்டா வைரஸ்

135 நாடுகளுக்கு டெல்டா வைரஸ் பரவி விட்டது. அடுத்த வாரம் கொரோனா தொற்று பரவல் உலகளவில் 20 கோடியை கடந்து விடும்.
உலகளவில் கொரோனா பாதிப்பு 20 கோடியை கடக்கிறது: 135 நாடுகளுக்கு பரவியது, டெல்டா வைரஸ்
Published on

நியூயார்க்,

இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட டெல்டா வைரஸ், மிக வேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது. இந்த வைரஸ் கவலைக்குரிய வைரசாக பார்க்கப்படுகிறது.

இந்த வைரஸ் தற்போது 135 நாடுகளுக்கு பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

ஆல்பா வைரஸ் 182 நாடுகளுக்கு பரவி இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை மேலும் கூறுவதாவது:-

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் (ஜூலை 26-ஆகஸ்டு 1) 40 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் 37 சதவீதமும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 சதவீதமும் தொற்று அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 9 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த வாரம் சாவு எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்காவில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 420 பேரும், இந்தியாவில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 923 பேரும், இந்தோனேசியாவில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 891 பேரும், பிரேசிலில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 830 பேரும், ஈரானில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 722 பேரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அடுத்த வாரம் உலகளவிலான கொரோனா பாதிப்பு 20 கோடியை கடந்து விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com