‘கூகுள்’ தேடுதல் தளத்துக்கு வயது 21

கூகுள் நிறுவனம் 1998-ஆம் ஆண்டு இதே நாளில் உருவாக்கப்பட்டது. கூகுள் உருவாக்கப்பட்டு 21 ஆண்டுகள் ஆகியுள்ளது.
‘கூகுள்’ தேடுதல் தளத்துக்கு வயது 21
Published on

புதுடெல்லி,

இணையதள உலகில் சிறந்த தேடுபொறியாக விளங்கும் கூகுள் தளம் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களான செர்ஜெய் பிரின், லாரன்ஸ் (லாரி) பேஜ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

உலகம் முழுவதும் இன்று 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் சிறந்த தேடுதல் தளமாக விளங்கும் கூகுள் மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான கேள்விகளுக்கு பதில் தேடப்படுகிறது. எளிதாக கையாளக்கூடிய வகையிலும் இருப்பதால் உலகம் முழுவதும் இணையதளவாசிகளின் முக்கியமான வழிகாட்டியாக கூகுள் விளங்குகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கூகுள் நிறுவனம் நேற்று தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடியது. இதையொட்டி சிறப்பு டூடுல் போட்டு இணையதள செயல்பாட்டாளர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளது.

குறிப்பாக தபால் அட்டை ஒன்றில், 1990-களில் செயல்பாட்டில் இருந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், மிகப்பெரிய பிரிண்டர் போன்றவற்றின் படங்களுடன் டூடுல் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த கம்ப்யூட்டரின் மானிட்டரில் பழைய கூகுள் லோகோவும் பொறிக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்கள் நிறுவனத்தின் தொடக்க கால வரலாற்றையும் கூகுள் தளம் வெளியிட்டு இருந்தது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com