கூகுளுக்கு இன்று பிறந்தநாள்... இணையத்தை அலங்கரித்த சிறப்பு டூடுல்!

செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
கூகுளுக்கு இன்று பிறந்தநாள்... இணையத்தை அலங்கரித்த சிறப்பு டூடுல்!
Published on: 

கலிபோர்னியா

உலகின் முன்னணி இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் தனது 28-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி, கூகுள் முகப்புப் பக்கத்தில் சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

இணையத்தில் தகவல்களை தேடுவதற்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் தளமாக கூகுள் விளங்கி வருகிறது. தேடுபொறி சேவையுடன், ஜிமெயில், கூகுள் மேப்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் கூகுள் வழங்கி வருகிறது.

சிறப்பு டூடுல்

கூகுளின் பிறந்தநாளை முன்னிட்டு, அதன் முகப்புப் பக்கத்தில் வழக்கமான கூகுள் லோகோவுக்கு பதிலாக சிறப்பு வடிவமைப்புடன் கூடிய டூடுல் இடம்பெற்றுள்ளது. இந்த டூடுலை பயனர்கள் கிளிக் செய்வதன் மூலம் கூகுளின் பிறந்தநாள் மற்றும் அதன் பயணம் தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இருந்து, இணைய உலகில் தகவல்களை தேடும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேடல் சேவைகளிலும் தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் கூகுள், தற்போது செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டூடுல்களை வெளியிட்டு வரும் கூகுள், இந்த ஆண்டும் பயனர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிறந்தநாள் டூடுலை வெளியிட்டுள்ளது. இதனை பல்வேறு சமூக வலைதளங்களில் பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com