அயல்நாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க அரசு முயற்சி - அமைச்சர் வி கே சிங்

அயல்நாடுகளில் பணி புரியும் போது இறந்து போகும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி வழங்க அரசு முயற்சிக்கிறது என்று கூறினார் அயலுறவுத் துறை இணை அமைச்சர் வி கே சிங்.
அயல்நாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க அரசு முயற்சி - அமைச்சர் வி கே சிங்
Published on

அயல்நாட்டு தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்க அரசு முயற்சி - அமைச்சர் வி கே சிங்

ஏற்கனவே ப்ரவஸி பாரதீய பீமா யோஜனா எனும் காப்பீடு திட்டம் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இருக்கிறது. அத்திட்டம் விபத்தினால் ஏற்படும் இறப்புகளுக்கு இழப்பீடு தருகிறது. ஆனால் இயற்கையான மரணங்களுக்கு இழப்பீடு தருவதில்லை. எனவே இயற்கையான மரணங்களுக்கும் இழப்பீடு வழங்குகிற திட்டம் ஒன்றை நாம் கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இறந்து போகும் தொழிலாளியின் குடும்பம் பலன் பெறும். இது பற்றி அமைச்சகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பாஸ்போர்ட் வழங்கும் சேவையில் 800 தலைமை அஞ்சலகங்களை ஈடுபடுத்த அமைச்சகம் சிந்தித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது 86 தலைமை அஞ்சலகங்களை இதற்காக தேர்வு செய்துள்ளோம். பின்னர் 800 தலைமை அஞ்சலகங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்த எண்ணியுள்ளோம் என்றார் அமைச்சர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com