47 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி உலக சாதனை படைத்த கிரேக்கர்

கிரேக்க நாட்டை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர் 47 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
47 வினாடிகளில் விரைவாக முடி வெட்டி உலக சாதனை படைத்த கிரேக்கர்
Published on

ஏதென்ஸ்,

ஒருவரின் தோற்ற பொலிவில் முக அழகும் பெரிதும் கவனம் கொள்ளப்படுகிறது. அதற்கு தலைமுடியும் பெரும் பங்கு வகிக்கிறது. சீராக வாரப்பட்ட தலைமுடி ஒருவரின் நல்ல பண்பை வெளிப்படுத்துகிறது. இந்த தலைமுடியை அழகுப்படுத்துவதும் கூட ஒரு கலையாக பார்க்கப்படுகிறது.

இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் பலர், முடிகளை வைத்து வகை வகையாக அலங்காரம் செய்து தங்களின் அழகை மேருகேற்றி கொள்கின்றனர். இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் கான்ஸ்டன்டினோஸ் கொடோபிஸ் என்பவர் கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார்.

அவர் தலைமுடியை வைத்து அப்படி என்ன செய்து விட்டார் என்கிறீர்களா? டிரிம்மர் உதவியுடன் விரைவாக முடி வெட்டி சாதனை படைத்து உள்ளார். இதற்கு இவர் எடுத்து கொண்டது 47.17 வினாடிகள். இதனை செய்து முடித்ததும் கின்னஸ் உலக சாதனை அமைப்பின் நீதிபதிகள் வருகின்றனர்.

அவர்கள் முடி வெட்டி கொண்டவரின் தலைமுடியின் நீளம் பற்றி அளந்து கொண்டனர். பின்னர் முறையாக பணி முடிந்து இருக்கிறது என உறுதி செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கான்ஸ்டன்டினோசின் பெயர் கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்து கொள்ளப்பட்டு உள்ளது.

இதுபற்றிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டு, விரைவாக முடி வெட்டி கொள்ள விரும்புகிறீர்களா? 45 வினாடிகளில் முடி வெட்டி கொள்ளலாம் வருகிறீர்களா? என அதற்கு தலைப்பும் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com