“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.
“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” - டிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
Published on

நியூக்,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கின் தன்னாட்சி பெற்ற பிராந்தியம் கிரீன்லாந்து. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தீவு இதுவாகும்.

பருவநிலை மாற்றம் காரணமாக கிரீன்லாந்து தீவில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் அங்கு எண்ணெய், தாதுக்கள் போன்ற இயற்கை வளங்கள் கொட்டி கிடப்பதால் சீனா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றன.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிரீன்லாந்தை வாங்க விரும்புவதாக தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், அதனை வாங்க விரும்பும் டிரம்பின் யோசனை அபத்தமானது என்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கிரீன்லாந்து டென்மார்க்குடையது அல்ல. கிரீன்லாந்து, கிரீன்லாந்தை சேர்ந்தது. டிரம்பின் கருத்து தீவிரமாக இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன் என கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடுத்த மாதம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com