பாட்டில் மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை

இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் இந்த வீடியோ பகிரப்பட்ட உடன் 17 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர்.
பாட்டில் மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் உலக சாதனை
Published on

ராவல்பிண்டி,

உலகம் முழுவதும் அரிய சாதனைகளை படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதன்படி, மேஜை ஒன்றின் முனை பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்து கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார்.

பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அதிவேகத்தில் இந்த பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலை தலையால் செய்து ரஷீத் சாதனை படைத்திருக்கிறார். அவர் மொத்தம் 77 பாட்டில் மூடிகளை ஒரு நிமிடத்தில் நீக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

எனினும், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிரப்பட்ட உடன் 17 லட்சம் பேர் அதனை பார்வையிட்டு உள்ளனர். பலரும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய தற்காப்பு கலை நிபுணரான பிரபாகர் ரெட்டி என்பவர், ஒரு நிமிடத்தில் 68 பாட்டில் மூடிகளை நீக்கியதே அப்போது சாதனையாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com