அமெரிக்காவை அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம் - அதிபர் ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவை அச்சுறுத்தும் துப்பாக்கி கலாச்சாரம் - அதிபர் ஜோ பைடன் அதிரடி நடவடிக்கை
Published on

வாஷிங்டன்,

கடந்த ஜனவரியில் கலிபோர்னியாவின் மான்டேரி பார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அதிபயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள், தோட்டாக்களைத் தடை செய்வதில் தான் உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார். பைடன் அறிவித்துள்ள புதிய நடவடிக்கைகளின் மூலம், இனி பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகே துப்பாக்கிகள் விநியோகிக்கப்படும்.

துப்பாக்கியை ஒருவர் வாங்கும் முன்பு, அவர் குற்றவாளியா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை செய்பவரா என்பதை பார்த்த உடன் கண்டுபிடித்து விடலாம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தடை சட்டத்திற்கு பைடன் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையிலும், நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினரின் ஆதரவில்லாததால் சட்டம் இயற்றுவதில் சிக்கல் உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி சோதனைகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com