ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கிச்சண்டையில், 7 தலீபான் பயங்கரவாதிகள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை: 7 தலீபான் பயங்கரவாதிகள் பலி
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணம், ஆண்டார் மாவட்டத்தில் நனாய் கிராமத்தில் நேற்று காலை தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இந்த சண்டையில், 7 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். 2 தலீபான் பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து எஞ்சிய தலீபான் பயங்கரவாதிகள் ஓட்டம் பிடித்து விட்டனர்.

இந்த துப்பாக்கிச்சண்டை குறித்து தலீபான் பயங்கரவாதிகள் தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com