அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; பதற்றம்

அமெரிக்க பள்ளிக்கூடங்களில் இந்த ஆண்டு மட்டும் இதுவரையில் 16 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து உள்ளன.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; பதற்றம்
Published on

வாஷிங்டன்,

17வது துப்பாக்கிச்சூடு சம்பவம், மேரிலாந்து மாகாணத்தில் செயின்ட் மேரி நகரில் உள்ள கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

1500 மாணவர்கள் படிக்கிற அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் செய்வது அறியாது திகைத்து நின்றனர். உடனடியாக போலீஸ் படையினர் அங்கு விரைந்தனர். துப்பாக்கிச்சூட்டை அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பள்ளிக்கூடம் மூடப்பட்டது. மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு பற்றிய தகவல் அறிந்ததும், அந்த பள்ளியில் படிக்கிற மாணவர்களின் பெற்றோர், அங்கு குவிந்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர்ச்சேதம் உண்டா, படுகாயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஒருவரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com