

காபூல்,
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் கடந்த வாரத்தில் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்திற்கு தலீபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் காபூல் நகரில் ஆம்புலன்ஸ் ஒன்றை தீவிரவாதிகள் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தினை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு சாலையில் இருந்த பொதுமக்களே அதிகளவில் இலக்காகியுள்ளனர். கடைகள், சந்தைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலீபான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிலையில், காபூல் நகரில் அமைந்துள்ள மார்ஷல் பாகிம் தேசிய ராணுவ பல்கலை கழகத்தில் இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களால் பல்கலை கழகத்திற்குள் நுழைய முடியவில்லை.
இந்த சம்பவத்தில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
#militant #kabul #gunmen