அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்

அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா சுற்றுச்சுவர் மீது வெறுப்பூட்டும் கருத்துக்கள் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கிய குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவின் சுற்றுச்சுவர் மீது வெறுப்பூட்டும் வாசகங்களையும் மர்ம நபர்கள் கிறுக்கியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஹாலிவுட் நகரத்தில் உள்ளதால் ஹாலிவுட் சீக்கிய கோவில் என்று பரவலாக அறியப்படுகிறது. குருத்வாரா மீது தாக்குதல் நடத்தியதை அந்த வழியாக வந்த கர்னா ரே என்பவர், பார்த்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்களை, தாக்குதலை நிறுத்துமாறும் காவல்துறையை அழைக்கப்போவதாகவும் கர்னா ரே கூறியிருக்கிறார். ஆனால், அந்த மர்ம நபர்கள் கர்னா ரேவை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். குருத்வாரா தாக்கப்பட்டது தொடர்பான வீடியோவை கர்னா ரே தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். குருத்வாராவில் வெறுப்பூட்டும் கருத்துக்கள் எழுதப்பட்டது தொடர்பாக ஹாலிவுட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com