தீவிரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளி என பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் குஜ்ரான்வாலா நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
தீவிரவாதி ஹபீஸ் சயீத் குற்றவாளி என பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு
Published on

இஸ்லாமாபாத்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது. மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்து வந்தது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் வந்ததைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா, பலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை கடந்த 3-ந் தேதி பயங்கரவாத தடுப்பு படையினர் பதிவு செய்தனர். பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு அவர்கள் நிதி திரட்டினர் என்பதுதான் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத் லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்த போது அதிரடியாக கைது செயய்யப்பட்டு சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் குஜ்ரான்வாலா நீதிமன்றத்தால் ஹபீஸ் சயீத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். வழக்கு குஜராத் (பாகிஸ்தான்) க்கு மாற்றப்பட்டது என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com