ஜி-20 மாநாட்டு எதிர்ப்பாளர்களை ”கிறுக்கர்களாக” பார்க்கும் அரேபிய அகதிகள்

ஜெர்மனியில் அகதிகளாக வாழ்ந்து வரும் அரேபியர்களுக்கு ஜி-20 மாநாட்டு எதிர்ப்பாளர்களின் செய்கைகளை ‘கிறுக்கித்தனமாக’ தோன்றுகிறது.
ஜி-20 மாநாட்டு எதிர்ப்பாளர்களை ”கிறுக்கர்களாக” பார்க்கும் அரேபிய அகதிகள்
Published on

ஹாம்பர்க்

தங்களை ஏற்றுக்கொண்டுள்ள நகரத்தை பாழாக்கும் பைத்தியகாரதனத்தையும் காவல்துறையினரின் பொறுமையையும் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

இதை எகிப்தில் மக்கள் செய்தால் சுடப்பட்டு விடுவார்கள் என்றார் இப்ராஹீம் அலி எனும் இளைஞர். அரசு அனைத்தையும் கொடுக்கிறது, வீடு, வேலையில்லாக்காலப் பலன்கள், கல்வி என அனைத்தையும் கொடுக்கிறது. அப்போதும் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை.. இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார்.

அவர் உட்பட பல அரேபியர்கள் மதுபானங்களையும் மத்தியகிழக்கு நாடுகளின் உணவுப்பொருட்களையும் போராட்டக்காரர்களுக்கு விற்று வருகின்றனர். அவர்கள் கிறுக்கர்களாக இருக்கிறார்கள். என்னால் என் கண்ணை நம்ப முடியவில்லை என்கிறார் 32 வயதாகும் முகம்மது ஹலாபி. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அவர் அகதியாக ஜெர்மனி வந்தார். அவர்களிடம் அழகான நாடு இருக்கிறது. இருந்தும் அதை அழிக்கின்றனர் என்றார் அவர்.

ஹலாபி ஜி-20 மாநாட்டை கவனித்து வந்தாலும் சிரியாவில் உள்நாட்டுப் போர் ஓய்வதற்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா என்பதையே அதிகம் எதிர்பார்க்கிறார். அவரது எதிர்ப்பார்ப்பு அதிகமில்லை. அதனால் டிரம்பும், புடினும் தென்மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய உடன்பட்டதை அது ஒரு ஜோக். அவர்கள் தங்களின் நலன்களை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் என்றார். போராட்டக்காரர்கள் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டப்போது அதை அவர் படம் எடுக்கப்போனார். அது ஒன்றும் பயம் தராது. விமானத்திலிருந்து குண்டு போடும்போதுதான் பயமாக இருக்கும் என்று தன் சொல்லும் அவர் தன் குடும்பத்தாரிடம் தான் எடுத்தப் படங்களை காட்டுகிறார்,

உள்ளூர் மக்கள் பிரதமர் மெர்கலின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வன்முறை நடைபெறும் என்று தாங்கள் சொல்லியும் அவர் மாநாட்டை ஹாம்பர்கில் நடத்தியதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். போராட்டம் முடிவிற்கு வந்தவுடன் அவ்விடத்தை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்ய பலர் உதவுகின்றனர். மெர்கலோ காவல்துறையினர் நன்கு பணிபுரிந்ததாக பாராட்டிவிட்டு, தக்க இழப்பீடுகளை குடியிருப்போர்க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆனால் உள்ளூர்வாசிகளை போல் ஹலாபிக்கு மெர்கல் மீது கோபமில்லை. அவர் இல்லாமல் நான் இங்கு வந்திருக்க முடியாது என்கிறார் அவர், ஐரோப்பிய நாடுகள் பல அகதிகளை ஏற்க மறுத்து வரும் நிலையில் மெர்கல் அவர்களுக்காக வாதாடி ஜெர்மனியி அடைக்கலம் கொடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com