ஹார்வே சூறாவளியால் ரூ.10 லட்சம் கோடி பேரிழப்பு; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ரூ.10 லட்சத்து 23 ஆயிரம் கோடி அளவில் பொருட்சேதத்தினை ஏற்படுத்திய ஹார்வே சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஹார்வே சூறாவளியால் ரூ.10 லட்சம் கோடி பேரிழப்பு; பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு
Published on

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக அளவில் பேரிழப்பு ஏற்படுத்திய தேசிய பேரிடராக ஹார்வே சூறாவளியின் பாதிப்பு உள்ளது. கடந்த வெள்ளி கிழமை சூறாவளி கரையை அடைந்ததும் டெக்சாசில் 52 இஞ்ச் அளவிற்கு மழை பொழிவை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றில் அதிக மழை பொழிவாக இது கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரண்டாவது முறையாக டெக்சாஸ் எல்லையை ஒட்டிய லூசியானா கடலோர பகுதியை ஹார்வே கடந்து சென்றது. இதனால் பெருமளவில் மழை பொழிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வெள்ள பெருக்கும் ஏற்பட்டது.

இந்நிலையில் வெள்ளம் வடிந்து வரும் பகுதியிலிருந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. 20 பேரை தொடர்ந்து காணவில்லை.

டெக்சாஸ் நகரில் 32 ஆயிரத்துக்கும் கூடுதலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 30 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்போட் கூறினார்.

இந்த வெள்ளத்திற்கு இந்திய மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். 1 லட்சத்திற்கும் கூடுதலான இந்திய அமெரிக்கர்கள் ஹூஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். சூறாவளி தாக்குதலில் அவர்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com