இன்ஸ்டகிராமில் இந்த வசதியை பார்த்தீங்களா? மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா


இன்ஸ்டகிராமில் இந்த வசதியை பார்த்தீங்களா? மூன்று புதிய அப்டேட்களை வெளியிட்ட மெட்டா
x
தினத்தந்தி 9 Aug 2025 5:58 PM IST (Updated: 9 Aug 2025 6:04 PM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துபவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் செயலியாக இன்ஸ்டகிராம் உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 2 பில்லியன் பேர் இன்ஸ்டாகிரம் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட இன்ஸ்டா பயனர்கள் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. அந்த அளவு ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் மத்தியில் இன்ஸ்டாகிரம் செயலி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, ரீல்ஸ்கள் மிகவும் பிரபலம் ஆகியுள்ளன. ஆரம்பத்தில் புகைப்படம் மட்டுமே பதிவிடும் செயலியாக இருந்த இன்ஸ்டா தனது பயனர்களை கவருவதற்காக புது புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரீல்ஸ்கள், லைவ் சாட்கள் என பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக மூன்று அப்டேட்களை இன்ஸ்டகிராம் கொண்டு வந்துள்ளது.

அதாவது எக்ஸ் தளத்தில் இருப்பது போல ரீல்ஸ்களை ரீபோஸ்ட் செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, பயனர்களுக்கு இடையே தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக இண்டரக்டிவ் மேப், பிரண்ட்ஷிப் டேப் ஆகிய வசதிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்கள் பயனர்கள் வெகுவாக கவர்ந்தாலும் , தனியுரிமையை பாதிக்கும் வகையில் மேப் வசதி உள்ளிட்டவை இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகிறார்கள்.

1 More update

Next Story