ஹவாய் எரிமலை வெடிப்பு: 1 நாளில் 500 முறை நிலநடுக்கம், 8000 அடிக்கு எழுந்த புகை மண்டலம்

ஹவாய் தீவில் எரிமலை வெடிப்பின் காரணமாக 24 மணி நேரத்தில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 8000 அடிக்கு புகை மண்டலம் எழுந்துள்ளது.
ஹவாய் எரிமலை வெடிப்பு: 1 நாளில் 500 முறை நிலநடுக்கம், 8000 அடிக்கு எழுந்த புகை மண்டலம்
Published on

ஹவாய் தீவு,

ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் இந்த தீவில் கடந்த ஒருமாதமாக எரிமலை வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மீண்டும் அங்கு எரிமலை வெடித்துள்ளது. எரிமலையை தொடர்ந்து அங்கு வரிசையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு உள்ள கிலாயூ என்ற எரிமலை நேற்று வெடித்தது. இந்த எரிமலை மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 7 முறை வெடித்துள்ளது. எரிமலை மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் குடியிருப்பு பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

எரிமலையின் தொடர் வெடிப்பு காரணமாக அங்குள்ள பகுதி முழுவதும் எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 5.5-ஆக ரிக்டர் அளவில் பதிவாகியது. எரிமலை வெடிப்பு காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த எரிமலையை சுற்றிய 5 கிலோ மீட்டர் பகுதியில் 500 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிகமான நிலநடுக்கம் எங்குமே ஏற்பட்டது இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக 8000 அடி உயரத்திற்கு தூசுகளும், புழுதிகளும் எழுந்துள்ளது. எரிமலையை சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் பகுதி வரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com