பிரேசிலில் கொரோனா பேரிடர் காலத்தில் 4வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்

பிரேசிலில் கொரோனா பேரிடர் காலத்திற்கு இடையில் 4வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் கொரோனா பேரிடர் காலத்தில் 4வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றம்
Published on

ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளன. பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அதிபர் ஜெயிர் போல்சனரோ தலைமையிலான அரசு கொரோனா வைரசை முறையாக கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் ஜெயிர் போல்சனரோ அதிபராக பதவி ஏற்றது முதல் சுகாதார அமைச்சராக இருந்து வந்த லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நெல்சன் டீச் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் இவரும் சில வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ராணுவ ஜெனரல் எட்வர்டோ பசுவெல்லோ இடைக்கால சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவிக்கு அவர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் மருத்துவத் துறையில் எந்த வித அனுபவம் இல்லாத ராணுவ ஜெனரலை சுகாதார அமைச்சராக நியமித்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து பிரேசிலில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தற்போது 4-வது முறையாக சுகாதாரத் துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.

எட்வர்டோ பசுவெல்லோ சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, டாக்டரும் இருதயவியல் சங்கத்தின் தலைவருமான மார்செலோ குயிரோகா புதிய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com