

கொழும்பு,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசிய மருந்து பொருட்கள் கிடைக்காததால் சுகாதார கட்டமைப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால், யாழ்ப்பாணத்தில் அரச மருத்துவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி யாழ்ப்பாணம் மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.