சீனாவில் கனமழைக்கு 20 பேர் பலி

சீனாவில் கனமழைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கனமழைக்கு 20 பேர் பலி
Published on

பீஜிங்,

சீனாவின் யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 2-ந்தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள 8 மாகாணங்களில் உள்ள 110 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்புள்ள பயிர்கள் நாசமானதோடு, 2,800 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தென்மேற்கு மாகாணத்தில் 8 பேர் உள்பட மொத்தம் 20 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு வீரர்களோடு போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். யாங்ஸ்பு மாகாணத்தில் ஆயிரம் ஓட்டல்கள், 5 ஆயிரம் கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுற்றுலா பயணிகளும், கிராம மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கனமழை வெள்ளத்தால் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி உள்ளன. பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com