தாய்லாந்தில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் கனமழை; வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
Published on

தாய்லாந்து,

தாய்லாந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த மூன்று தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சூழலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை பாராசூட்டில் கொண்டு சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com