சீனாவில் கனமழை, வெள்ளத்துக்கு 21 பேர் பலி

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த மாத இறுதியில் சீனாவின் மத்திய மாகாணம் ஹெனானில் உள்ள ஷெங்ஜோ நகரில் 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் கன மழை கொட்டி தீர்த்தது.
சீனாவில் கனமழை, வெள்ளத்துக்கு 21 பேர் பலி
Published on

இதனால் அந்த நகரமே மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர்.இந்த நிலையில் சீனாவின் மத்திய மாகாணமான ஹூபெயில் உள்ள லியுலின் கடந்த இரு தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. புதன்கிழமை இரவு 9 மணி தொடங்கி வியாழக்கிழமை காலை 9 மணி வரையிலான நேரத்தில் மட்டும் 503 மி.மீ. மழை கொட்டியதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. பேய் மழையை தொடர்ந்து அந்த நகரில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் மாயமானதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அந்த தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com