இலங்கையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இலங்கையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

இலங்கை நுவரெலியா மாவட்டம் ஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

சாலையில் தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் நூறு பேரை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, வீடுகளில் இருந்த உடைமைகள் உணவுப் பொருட்கள் நீரில் முழ்கி சேதமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com