

குவிட்டோ,
ஈகுவடார் நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். 47 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண் செயலாளர் அலெக்சாண்டிரா ஆக்கிள்ஸ் கூறும்பொழுது, இந்த மழையால் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் 7,700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் துணை அதிபர் ஓட்டோ சோனென்ஹால்ஜ்னெர், அடுத்த 3 அல்லது 4 வாரங்களுக்கு மழை தொடரும் என குறிப்பிட்டு உள்ளார்.