அமெரிக்கா: மலையில் மோதிய ஹெலிகாப்டர்-4 பேர் பலியான சோகம்

Photo Credit: AI
விபத்து தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை 11 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விபத்து நடைபெற்ற பகுதி வழியாக விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் பைலட்டைத் தவிர, ஏனைய மூன்று பேரும் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை இழந்து துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு மனத் தைரியம் அளிக்க இறைவனை வேண்டிக் கொள்வதாக அந்த மாநில ஷெரிப் தெரிவித்துள்ளார்.






