மரியுபோலில் சிக்கியுள்ள எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் எலான் மஸ்க்! - உக்ரேனிய தளபதி உருக்கம்

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் இருந்து தப்பிக்க வேற வழியில்லாமல் அவர் இவ்வாறு கூறினார்.
Image Credit: AFP
Image Credit: AFP
Published on

கீவ்,

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியுள்ள மீதமிருக்கும் உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்களின் கதி குறித்து கடுமையான எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உக்ரேனிய தளபதி ஒருவர் சிக்கிக் கொண்டார். அவர் அங்கிருந்து தப்பித்து செல்ல உதவிடுமாறு உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கை அணுகியுள்ளார்.

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் அசோவ்ஸ்டல் ஸ்டீல் ஆலையில் சிக்கியவர்களை மீட்க உதவுவதற்காக எலான் மஸ்க்கை அவர் அணுகியுள்ளார்.

மரியுபோலில் சிக்கிக் கொண்ட உக்ரேனிய தளபதி கூறிடிருப்பதாவது, சாத்தியமற்ற விஷயங்களை சாத்தியமாக்குமாறு நம்புவதற்கும், அதனை மக்களுக்கு கற்பிக்கவும், நீங்கள் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என மக்கள் கூறுகிறார்கள்.

உயிர்வாழ முடியாத இடத்தில் நான் இப்போது வாழ்கிறேன். அசோவ்ஸ்டலில் இருந்து வெளியேற எங்களுக்கு உதவுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில் இருந்து தப்பிக்க வேற வழியில்லாமல் அவர் இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com