லெபனான்: பள்ளியில் 130 பயங்கர ஆயுதங்களை பதுக்கிய ஹிஸ்புல்லா - இஸ்ரேல்

லெபனான்:  பள்ளியில் 130 பயங்கர ஆயுதங்களை பதுக்கிய ஹிஸ்புல்லா - இஸ்ரேல்
Published on

டெல் அவிவ்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்த நிலையில், லெபனானில் உள்ள

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று வெளியிட்ட செய்தியில், லெபனானின் பிந்த் பெயில் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் 130 ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என இன்று தெரிவித்து உள்ளது.

அவற்றில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள், எறிகுண்டுகள், விமான ஒழிப்பு ராக்கெட், கண்காணிப்பு சாதனம், போர் கருவிகளும் மற்றும் கூடுதல் ஆயுதங்களும் இருந்தன என குறிப்பிட்டு உள்ளது. அவற்றுடன், ஹிஸ்புல்லா அமைப்பின் கொடிகள் மற்றும் அந்த் அமைப்பின் பிற சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டன என தெரிவித்து உள்ளது.

அதற்கு முன்பு இன்று ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் 70 உள்கட்டமைப்பு தளங்களை ஒரு நிமிடத்தில் தாக்கி அழித்தோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று தெரிவித்து இருந்தது. இதுதவிர 20-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்கி அழிக்கப்பட்டனர் என மற்றொரு செய்தியில் தெரிவித்து இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com