மங்கோலியாவில் வேகமாக பரவும் பிளேக் நோய்

மங்கோலியாவில் பிளேக் நோய் தீவிரமாக பரவி வருகிறது.
மங்கோலியாவில் வேகமாக பரவும் பிளேக் நோய்
Published on

மங்கோலியாவில் கொறித்துண்ணும் வகையை சேர்ந்த மர்மோத் அணில்களின் இறைச்சி சுவையான உணவாக கருதப்படுகிறது. அதனை வேட்டையாடுவது அங்கு தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும் அதனை பலர் சட்ட விரோதமாக வேட்டையாடி வருகின்றனர். இந்தநிலையில் மேற்கு மங்கோலியாவின் சவ்கான் மாகாணத்தில் ஏராளமான மர்மோத்கள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. இதனால் சில மர்மோத்களின் மாதிரியை எடுத்து நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில் பிளேக் நோய் பாதிக்கப்பட்டு அவை இறந்தது தெரிய வந்தது. அங்குள்ள 17 மாகாணங்களில் இது பரவி உள்ளது.

பிளேக் நோய்க்கு சரியான சிகிச்சை பெறாவிட்டால் 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு ஏற்படும். எனவே அங்கு மர்மோத்களின் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என அந்த நாட்டின் சுகாதார துறை எச்சரித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com