ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை - நாடாளுமன்றம் ஒப்புதல்

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாட்ரிட்,

ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசேதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசேதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 185 உறுப்பினர்களும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர். மூன்று பேர் வாக்களிக்கவில்லை. இந்த வாக்கெடுப்பு பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இதுவரை உலகம் முழுவதும் ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளில் மட்டுமே மாதவிடாய் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் மட்டும் தான்.

அதேபோல் எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றொரு சட்டத்திற்கும் ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com