இலங்கையில் அனைத்து பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு

இலங்கையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதையடுத்து, அனைத்து பாதுகாப்பு படையினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Image courtesy : ANI
Image courtesy : ANI
Published on

கொழும்பு,

கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கையில் தற்போது அவசர நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்காக அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

இந்த நிலையில் இலங்கையில் அனைத்து படையினரின் விடுமுறைகளும் ரத்து செய்து இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள், மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com