"ஹாலிவுட் பேரழிவிற்கு உள்ளாகிறது" - பிற நாட்டு படங்களுக்கு 100 சதவீத வரி; டிரம்ப் உத்தரவு


ஹாலிவுட் பேரழிவிற்கு உள்ளாகிறது - பிற நாட்டு படங்களுக்கு 100 சதவீத வரி; டிரம்ப் உத்தரவு
x

டிரம்ப் அறிவிப்பால், அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனக்கு சொந்தமான 'ட்ரூத்' சமூக வலைதளத்தில், " அமெரிக்க திரைப்படத் துறை (ஹாலிவுட்) மிக வேகமாக பேரழிவிற்குள்ளாகி வருகிறது. மற்ற நாடுகள் அதற்கான முயற்சியை ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன. அது அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அனைத்துக்கும் மேலாக இந்தப் படங்கள் பிரச்சார பாணியில் உள்ளன. எங்களுக்கு வேண்டியதெல்லாம் மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் எடுக்க வேண்டும். இந்த புதிய கட்டண முறை திரைப்படத் துறையில் நிலவும் போட்டியை சமன் செய்வதையும், அமெரிக்க தேசத்தில் உள்ள ஸ்டூடியோக்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடர ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது. மேலும் 100 சதவீத வரி விதிப்பால் டிக்கெட் கட்டணம், படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிக்கான கட்டணம் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story