ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை விதிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை விதிப்பு
Published on

ஹாங்காங்,

ஹாங்காங்கில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர், ஏர் இந்தியா விமானம் மூலமாக வந்தவர்கள் என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. அண்மையில், கொரோனா தொற்று பாதித்த பயணிகள் வந்ததால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விமான போக்குவரத்து ஆணையம் 24 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com