சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது-ஜி ஜின்பிங்

சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என சீனா அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.
REUTERS
REUTERS
Published on

ஹாங்காங்

சீனாவுடன், ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஜி ஜின்பிங் பேசியதாவது:-

சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது. ஹாங்காங் என்றுமே என் மனதில் இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகிவிட்டார்கள்.

பல குழப்பங்களுக்கும் பிறகும் ஹாங்காங்கை கீழ விழ வைக்க முடியாது என்பதை சிலர் வலியுடன் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் ஹாங்காங்கின் வளர்ச்சியிலேயே நோக்கம் கொண்டுள்ளேன். ஹாங்காங் பல சவால்களையும் மீறி உயிர் பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.

5 வருடங்களுக்குப் பிறகு ஹாங்கிற்கு ஜி ஜின்பிங் பயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயணம் காரணமாக ஹாங்காங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com