பிரேசிலில் பயங்கரம்: பஸ் - லாரி மோதி கோர விபத்து - 23 பேர் பலி

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில்.
பிரேசிலில் பயங்கரம்: பஸ் - லாரி மோதி கோர விபத்து - 23 பேர் பலி
Published on

பிரேசிலா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் பரானா மாகாணம் லிபிடுவா நகரில் இருந்து பண்டா கிராசா நகருக்கு இன்று அதிகாலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 28 பேர் பயணித்தனர்.

23 பேர் பலி

பரானா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com