ஈரானுக்கு ஆதரவாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம்?

ஈரானுக்கு ஆதரவாக உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பாப் அல்-மண்டெப் ஜலசந்தியையும் மூடுவதாக அச்சுறுத்தியுள்ளனர்
ஈரானுக்கு ஆதரவாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை  மூட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திட்டம்?
Published on

அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2 வாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் நீடித்து வரும் நிலையில், உலக வர்த்தகத்தில் 20 சதவீதம் நடைபெறும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது இந்தியா உட்பட உலகெங்கும் எரிவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழு பாப் அல்-மண்டெப் ஜலசந்தியையும் மூடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். இதனால் உலக கடல்வழி எரிசக்தி மற்றும் வர்த்தகத்தில் 30% பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த வழித்தடம் ஆசியா-ஐரோப்பா வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஈரான் மற்றும் ஓமன் இடையே 33 கி.மீ. அகலத்தில் இந்த ஜலசந்தி அமைந்துள்ளது. மேற்கூறிய இரண்டு ஜலசந்திகளும் மூடப்பட்டால் ஆசியா-ஐரோப்பா வர்த்தகக் கப்பல்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப் ஆப் குட் ஹோப் வழியாகச் செல்ல 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகப் பயணிக்க நேரிடும். இதனால் எரிபொருள் செலவுகள் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com