இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் பதற்றம்

ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள அல் ஹூடைடா மீது டிரோன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் பதற்றம்
Published on

கெய்ரோ,

இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்படுகின்றனர். இதனால் செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையில் ஒரு கூட்டுப்படை உருவாக்கப்பட்டது. அவர்கள் செங்கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் டிரோன்கள் மூலம் வான்வழித்தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹூடைடாவில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அப்பகுதி தீ பற்றி எரிந்ததாகவும், வான்வழித் தாக்குதல்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் ஏமனில் பதட்டம் நிலவுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com