

அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் அவர் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது.எனினும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தியதன் மூலம் ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் வைரஸ் பரவலை வெற்றிகரமாக
கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பதவி காலத்தில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய பல திட்டங்களை ரத்து செய்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதியாக ஜோ பைடனின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பது குறித்து நாடு தழுவிய அளவில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் சரியாக 50 சதவீத அமெரிக்க மக்கள் ஜோ பைடனின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், அவரை ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் 42 சதவீத மக்கள் ஜோ பைடனை
ஜனாதிபதியாக ஏற்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீத மக்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.